April 1, 2023 5:57 pm

தேர்தலில் படுதோல்வி | அரசியலில் இருந்து ஒதுங்கி மீண்டும் நடிக்க வருகிறார் சிரஞ்சீவிதேர்தலில் படுதோல்வி | அரசியலில் இருந்து ஒதுங்கி மீண்டும் நடிக்க வருகிறார் சிரஞ்சீவி

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆந்திராவில் மெகா ஸ்டாரான சிரஞ்சீவி, தன்னுடைய ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை நம்பி பிரஜா ராஜ்ஜியம் கட்சி ஆரம்பித்தார்.  அந்த கட்சி  கடந்த சட்ட மன்ற தேர்தலில் சுமரான வெற்றியையே பெற்றது. இதனைதொடந்து  தனது கட்சியை காங்கிரசில் இணைந்த சிரஞ்சீவி, மத்திய அமைச்சரானார்.

இந்நிலையில் தெலங்கானா தனிமாநிலம் பிரிக்கப்பட்டதையடுத்து ஆந்திராவில்(சீமந்திராவில்) பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. திடீர் திருப்பமாக சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யான்  மோடிக்கு ஆதரவு தெரிவித்ததுடன் ஜன சேனா என்ற தனி கட்சி ஆரம்பித்து, காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மக்களவை தேர்தலில் பிரசாரம் மேற்கொண்டார்.

இத்நிலையில் மக்களவைத் தேர்தலில்  காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிரஞ்சீவி அரசியலில் இருந்து சிறிது காலம் ஒதுங்கியிருக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.. மேலும் சினிமாவில் மீண்டும் நடிக்க முடிவு செய்துள்ள அவர், சுதந்திர போராட்ட வீரர் ஒருவரை மையப்படுத்தி உருவாகும்  படத்தில் நடிக்க முடிவுசெய்துள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்