சாதனை | கோச்சடையான் வெளியான மூன்றே நாட்களில் ரூ.42 கோடிசாதனை | கோச்சடையான் வெளியான மூன்றே நாட்களில் ரூ.42 கோடி

2 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு ரஜினி நடித்து வெளியான கோச்சடையான் முதல் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் ரூ 42 கோடியை வசூலித்துள்ளது.

ரஜினிகாந்த் நடித்து வெளிவந்துள்ள கோச்சடையான் அனிமேஷன் படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. அனினேஷன் படங்களுக்கு இந்தியாவிலொ போதிய வரவேற்பு இல்லாததால் கோச்சடையான் குறித்து எதிர்மறையான கருத்துக்கள் நிலவிவந்தன. ஆனால் நடந்ததோ வேறு. இப்படம் படம் கடந்த 23-ம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. ரஜினியின் மகள்  சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள இப்படம் 2டி மற்றும் 3டி தொழில்நுட்பத்தில் வெளியிடபட்டது. உலகம் முழுவதும் 3000 திரையரங்குகளில் வெளியிடப்பட்ட இந்த படம் இந்தியாவில் மட்டும்  30கோடி வசூலித்துள்ளது வெளிநாடுகளில் 12 கோடி வரை வசூலித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் இப்படம் 100கோடிக்கு மேல் வசூல் சாதனை படைக்கும் என்று சினிமா வர்த்தகர்கள் கூறிவருகின்றனர்.

 

ஆசிரியர்