கே.எஸ்.ரவிகுமாரின் லிங்காவில் ரஜினியுடன் நடிக்கும் ஹாலிவுட் நாயகி!கே.எஸ்.ரவிகுமாரின் லிங்காவில் ரஜினியுடன் நடிக்கும் ஹாலிவுட் நாயகி!

‘கோச்சடையான்’ படத்தின் வெற்றி ரஜினியை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

இந்த உற்சாகத்தோடு தற்போது கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் ‘லிங்கா’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மைசூரில் பரபரப்பாக நடந்து வருகிறது. இதில் ரஜினிக்கு ஜோடியாக ஹிந்தி நடிகை சோனாக்‌ஷியும் தென்னிந்தியாவின் முன்னனி நடிகை அனுஷ்காவும் நடித்து வருகின்றன.

இந்நிலையில் படத்தில் ரஜினியுடன் பிரபல பிரிட்டிஷ் நடிகையும், பாடகியுமான லாரன் ஜெ. இர்வினும் நடிக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அவர் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்றிருப்பதாக கூறப்படுகிறது. ரஜினி, பிரிட்டிஷ் நடிகை லாரன் ஜெ. இர்வின் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பை சமீபத்தில் நடத்தி முடித்திருக்கிறார்கள்.

இந்த காட்சிகள் 1940 காலகட்டத்தில் நடப்பது மாதிரியாம். லாரன் ஜே.இர்வின், பிரிட்டிஷ் படமான ‘ஹார்ட்’, ஹாலிவுட் படமான ‘வகரி’ போன்றவற்றில் நடித்தவர். மேலும் லண்டனின் புகழ் பெற்ற நாடகங்களான வெஸ்ட் எண்ட், ஆன்னி, ஆலிவர் போன்றவற்றிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்