லைகா சினிமா தயாரிப்பு நிறுவனம் வழங்கும் விஜய்யின் பிறந்தநாள் பரிசுலைகா சினிமா தயாரிப்பு நிறுவனம் வழங்கும் விஜய்யின் பிறந்தநாள் பரிசு

 

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இரண்டாவது முறையாக விஜய்யை வைத்து இயக்கிக் கொண்டிருக்கிறார்.

இதில் சமந்தா கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்துக்கு கத்தி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. விஜய் இதில் ஹீரோ, வில்லன் என இரு துருவங்களாக நடிக்கிறார். தீபாவளி வெளியீடாக படம் திரைக்கு வரவிருப்பதால் படப்பிடிப்பு வேகம் எடுத்துள்ளது.

இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய்யின் பிறாந்த நாளான ஜூன் 22-ஆம் தேதி வெளியிட்டு, விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தர இருக்கிறார்கள். லைகா தயாரிப்பு நிறுவனமும், ஐங்கரன் தயாரிப்பு நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.

படத்துக்கு இசையமைக்கும் அனிருத் நான்கு பாடல்களுக்கு இசையமைத்துக் கொடுத்ததுடன் விஜய்யின் அறிமுகப்பாடலையும் பாடியுள்ளார். விஜய்யும் ஒரு பாடலைப் பாடப்போகிறார். இதுவரை இரண்டு பாடல்களுக்கான படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

 

ஆசிரியர்