அபிஷேக் பச்சனுடன் கருத்து வேறுபாடு – விவாகரத்து கேட்கிறார் ஐஸ்வர்யா ராய்? | கசியும் செய்தி !அபிஷேக் பச்சனுடன் கருத்து வேறுபாடு – விவாகரத்து கேட்கிறார் ஐஸ்வர்யா ராய்? | கசியும் செய்தி !

கணவர் அபிஷேக் பச்சனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், விவாகரத்து செய்யும் முடிவுக்கு வந்துவிட்டார் ஐஸ்வர்யா ராய் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால் இதனை அபிஷேக் பச்சன் மறுத்துள்ளார்.

ஐஸ்வர்யா ராயும் அபிஷேக் பச்சனும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்தனர். இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. திருமணத்துக்குப் பிறகும் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராய்.

ஆனால் மாமியார் ஜெயா பச்சனுடன் ஐஸ்வர்யா ராய்க்கு அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதல் நிலவி வந்ததாம். இதனை அபிஷேக் பச்சன் கண்டு கொள்ளாததால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுவிட்டதாக பாலிவுட்டில் செய்தி பரவியது.

இதைத் தொடர்ந்து கணவரைப் பிரிய ஐஸ்வர்யா ராய் முடிவெடுத்திருப்பதாக ஒரு இணையதளம் செய்தி வெளியிட்டிருந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனை அபிஷேக் பச்சன் மறுத்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒருவழியாக எனக்கும் ஐஸ்வர்யாவுக்கும் விவாகரத்து பெற்றுக் கொடுத்துவிட்டீர்கள். அப்படியே அடுத்த திருமணம் எப்போது என்றும் சொல்லிவிடுங்கள்!” என்று கிண்டலாகக் கூறியுள்ளார்.

விரைவில் இருவரும் சேர்ந்து மே 22-ம் தேதி தாங்கள் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச விழாவில் பங்கேற்கவிருப்பதைக் குறிப்பிட்டு, இந்த செய்தி பொய்யானது என மறுப்பு தெரிவித்துள்ளது அமெரிக்க எய்ட்ஸ் ஆராய்ச்சி அமைப்பு.

ஆசிரியர்