ஹன்சிகாவின் சம்பளம் இப்போ எத்தனை கோடி?ஹன்சிகாவின் சம்பளம் இப்போ எத்தனை கோடி?

ஹன்சிகா தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்திவிட்டராம்.

சிம்புவுடன் வாலு படத்தில் நடிப்பதற்காக ஹன்சிகாவுக்கு 60 லட்சம் சம்பளம் மட்டுமே கொடுக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு ஹன்சிகா நடிப்பில் வெளிவந்த சிங்கம் 2, பிரியாணி, மான் கராத்தே ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றன. இந்த வெற்றி ஹன்சிகாவின் மார்கெட் வேல்யூவை இன்னும் அதிகரித்தது.

தொடர்ந்து, மீகாமன், ரோமியோ ஜூலியட், அரண்மனை, உயிரே உயிரே என பல படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் இந்தப் படங்களில் நடிக்க ஹன்சிகாவிற்கு சம்பளமாக ரூ.75 லட்சம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஹன்சிகா தனது சம்பளத்தை ஒரு கோடியாக உயர்த்தியுள்ளார்.

தெலுங்குப் படத்துக்கு ரூ. 50 லட்சம் சம்பளமாக பேசி ஒப்பந்தமான ஹன்சிகா, பின்னர் படப்பிடிப்புக்கு சென்ற சில நாட்களிலேயே ஒரு கோடி சம்பளம் கேட்டிருக்கிறார்.இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பட தயாரிப்பாளர், சத்தமில்லாமல் ஹன்சிகாவை படத்திலிருந்தே தூக்கிவிட்டு இப்போது வேறொரு தெலுங்கு நடிகையை ஒப்பந்தம் செய்து விட்டாராம்.

காஜல் அகர்வால், தமன்னா, சமந்தா ஆகியோர் ஒரு கோடி வாங்குகிறார்கள். நான் மட்டும் எப்படி 75 லட்சத்துக்கு நடிப்பது என்று கூறி புதிய படங்களுக்கு தன்னை ஒப்பந்தம் செய்ய வருபவர்களிடம் கதையைக் கேட்பதற்கு முன்பே ஒரு கோடி சம்பளம் தர சம்மதித்தால் கதை சொல்லுங்கள் என்று விடாப்பிடியாய்ப் பேசுகிறார்.

.

ஆசிரியர்