சௌந்தர்யா ரஜினிகாந்தை சந்தித்தது என் வாழ்வின் மிகப் பெரிய தவறு: இயக்குனரின் கருத்தால் பரபரப்புசௌந்தர்யா ரஜினிகாந்தை சந்தித்தது என் வாழ்வின் மிகப் பெரிய தவறு: இயக்குனரின் கருத்தால் பரபரப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகளும்,கோச்சடையான் இயக்குனருமான சௌந்தர்யா மீது கன்னட இயக்குனர் ராகவா துவாரகி மோசடி புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சௌந்தர்யா பற்றி கன்னட இயக்குனர் ராகவா துவாரகி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளார். அதில் சௌந்தர்யா ரஜினிகாந்தை சந்தித்தது மிகப் பெரிய தவறு என்று தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில், எனது படமான மத்தே முங்காருவின் போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் சென்னையில் உள்ள சௌந்தர்யா ரஜினிகாந்துக்கு சொந்தமான தயாரிப்பு நிறுவனத்தால் தாமதப்படுத்தப்பட்டது. சௌந்தர்யாவின் அலட்சிய போக்கின் காரணமாக அவரது தயாரிப்பு நிறுவனத்தால் என் படத்தின் ரிலீஸ் தேதி பல முறை தள்ளி வைக்கப்பட்டது. இதனால என் படம் தோல்வியை தழுவியது. சௌந்தர்யா ரஜினிகாந்தை சந்தித்தது தான் என் வாழ்வின் மிகப் பெரிய பேரழிவு என்று தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்