‘உதிர்ப்பூக்கள்’ உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் அசோக் குமார். இவருக்கு சில தினங்களுக்கு முன்பு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது. அவசர பிரிவில் வைத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளிக்கிறார்கள். செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு உள்ளது. அசோக்குமார் அபாய கட்டத்தை தாண்டவில்லை என்று மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது. டைரக்டர்கள் மகேந்திரன், பாண்டியராஜன் ஆகியோர் நேரில் சென்று அசோக்குமார் உடல்நிலை குறித்து விசாரித்தனர்.