April 1, 2023 6:44 pm

‘தங்க மகள்’ ஆக ஸ்ருதிஹாசன் தேர்வு…! ‘தங்க மகள்’ ஆக ஸ்ருதிஹாசன் தேர்வு…!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

தெலுங்குத் திரையுலகமான டோலிவுட்டின் ‘தங்க மகள்’ ஆக ஸ்ருதிஹாசன் முதலிடத்தில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தமன்னா 2வது இடத்திலும் ஸ்ரேயா மூன்றவாது இடத்திலும் தேர்வாகியிருக்கிறார்கள். ஆந்திராவிலிருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று ஆன்லைன் வாக்குப் பதிவு மூலம் இதைத் தேர்வு செய்திருக்கிறது.

சமீபகாலமாக தனது கிளாமரான நடிப்பில் தெலுங்கு ரசிகர்களை கவர்ந்திழுத்த ஸ்ருதிஹாசன் முதலிடத்தில் தேர்வானதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இந்த வருடத்தில் இவர் நடித்து வெளிவந்த ‘எவடு, ரேஸ் குர்ரம்’ ஆகிய படங்களில் ஸ்ருதியின் தோற்றமும், கவர்ச்சியும் பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்தது. படத்துக்குப் படம் கிளாமரில் அடுத்த கட்டத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார். தற்போது தமிழில் ஒரு படத்திலும் ஹிந்தியில் நான்கு படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். டோலிவுட்டின் அதிக விரும்பத்தக்க நாயகியாக தேர்வானது பற்றி ஸ்ருதிஹாசன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்