எந்திரன் 2–ம் பாகத்தில் ரஜினி நடிப்பாரா?எந்திரன் 2–ம் பாகத்தில் ரஜினி நடிப்பாரா?

ரஜினியிடம் உடலை வருத்த வேண்டாம் என்று டாக்டர்கள் அறிவுரை கூறியதால் எந்திரன் 2–ம் பாகத்தில் நடிப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

ரஜினிக்கு ஏற்கனவே உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று திரும்பினார். படங்களில் நடிக்காமல் நீண்ட நாட்கள் வீட்டிலேயே ஓய்வு எடுத்தார்.

அதன் பிறகு மகள் சவுந்தர்யா இயக்கிய கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடித்தார்.

அதன் பெரும் பகுதி படப்பிடிப்பு ஸ்டுடியோவிலேயே நடந்தது. கடினமாக அவரை நடிக்க வைக்க வில்லை.

தொடர்ந்து ‘லிங்கா’ படத்திலும் தற்போது நடித்து வருகிறார். இதிலும் கஷ்டமான காட்சிகளில் அவரை நடிக்க வைக்கவில்லை. சண்டை காட்சிகளில் டூப் நடிகர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.

இந்த நிலையில் லிங்கா படம் முடிந்ததும் எந்திரன் 2–ம் பாகத்தை எடுக்க இயக்குனர் ஷங்கர் தயாராகி வருகிறார். இதற்கான கதையையும் அவர் தயார் செய்து விட்டார். சமீபத்தில் ‘லிங்கா’ படப்பிடிப்பு நடந்த ஸ்டிடுடியோவுக்கு சென்று ரஜினியை ஷங்கர் சந்தித்தார். அப்போது எந்திரன் 2–ம் பாகத்தை எடுப்பது பற்றி அவர்கள் பேசியதாக தெரிகிறது.

எந்திரன் 2–ம் பாகத்தில் ரஜினி உடலை வருத்தி நடிக்க வேண்டி இருக்கும் என கூறப்படுகிறது. இதனை அவரது உடல் நிலை தாங்காது என்கின்றனர்.

இந்த படத்தில் நடிப்பதற்கு ரஜினி சிகிச்சை அளித்த டாக்டர்கள் எதிர்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிரியர்