0
அஜீத் சினிமாவுக்கு வருவதற்கு முன்பிருந்தே பைக் ரேஸில் ஆர்வமாக இருந்தார். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் பைக்கும் கையுமாகத்தான் சுற்றுவார். பலமுறை போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளையும் வாங்கியிருக்கிறார். அதோடு, விபத்துக்களையும் சந்தித்திருக்கிறார். இருப்பினும் இப்போதுவரை அவது பைக் ரேஸ் ஆர்வம குறையவில்லை.
அதையடுத்து, சினிமாவில் காதல் கோட்டை படத்திற்கு பிறகு ஓரளவு பிசியான ஹீரோ ஆனபிறகு, படப்பிடிப்புகளில் ஓய்வாக இருக்கும் நேரங்களில் சிறிய அளவிலான மினி விமானங்களை பறக்க விட்டு ஜாலியாக பொழுதை கழித்து வந்தார். ஆனால், இப்போது போட்டோகிராப் மீது அவரது அடுத்த ஆர்வம் திரும்பியிருக்கிறது.
அதனால் தான் வெளியூர்களுக்கு செல்லும்போது எங்கு கண்ணைக்கவரும் அழகான பகுதிகளைக்கண்டாலும் போட்டோக்களை சுட்டுத்தள்ளுகிறார். அதோடு, தனது வீட்டில் ஒரு மினி தியேட்டர் வைத்திருப்பவர், அதில் தான் எடுத்த போட்டோக்களை போட்டு பார்க்கிறார். அப்படி தான் ஒவ்வொரு படத்தின் அவுட்டோருக்கும் செல்லும்போது விதவிதமான போட்டோக்களை எடுத்து தனித்தனி ஆல்பமாக போட்டு வைத்திருக்கிறார் அஜீத்.
ஆனால், இந்த போட்டோ எடுப்பதையும் தனது நட்பு வட்டார கேமரா மேன்களிடம் முறையாக கற்றுள்ள அஜீத், கேமராவுக்கு தேவையான லென்சுகளையும் வாங்கிக்குவித்துள்ளாராம்.