April 1, 2023 6:45 pm

கவர்ச்சி நடிகை அனுராதா மகன் சினிமாவில் அறிமுகம்கவர்ச்சி நடிகை அனுராதா மகன் சினிமாவில் அறிமுகம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

1990-களில் தமிழ் சினிமாவில் கவர்ச்சியிலும், குணச்சித்திர வேடத்திலும், ஒருசில படங்களில் ஹீரோயினாகவும் கலக்கியவர் அனுராதா. இவருடைய மகள் அபிநயஸ்ரீ நடிகையாகவும், நடன இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் வலம்வந்து கொண்டிருக்கிறார். அவரது குடும்பத்தில் இன்னொருவர் நடிகராகி இருக்கிறார். இவருடைய மகன் கெவின் ‘என்ன பிடிச்சிருக்கா’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

இயக்குனர்கள் விக்ரமன், ரவி மரியா ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றிய சுப்புராஜ் இந்த படத்தை இயக்குகிறார். கதாநாயகியாக பிரீத்தி விஜ் நடிக்கிறார். மேலும் ரவிமரியா, ஜெரால்டு, ஈ.ராஜன், சின்ராசு, முருகராஜ், அகோலிப்டா, அருள்ஜோதி, மும்பை சித்தரா ஆகியோருடன் தயாரிப்பாளர் பி.ஏ.பிரகாசம் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார்.

படம் பற்றி இயக்குனரிடம் கேட்டபோது, சிலம்பாட்டம் மற்றும் கிராமிய கலைகள் அத்தனையிலும் தேர்ச்சி பெற்ற கிராமத்து இளைஞனுக்கும் அமெரிக்காவில் படித்து முடித்து தனது தாத்தாவுடன் தாயகம் திரும்பும் இளம் பெண்ணுக்கும் ஏற்படும் காதல் மற்றும் குடும்பத் தகராறு, கிராமிய பழக்க வழக்கங்களை மையப்படுத்திக் கதை உருவாக்கப்பட்டுள்ளது. கம்பம், தேனி, கொடைக்கானல் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது என்றார்.

பிரைட் பியூச்சர் மூவி மேக்கர்ஸ் என்ற புதிய படநிறுவனம் சார்பாக பி.ஏ.பிரகாசம் தயாரிக்கிறார். ஸ்ரீவித்யா கலை இசையமைக்கிறார். ராஜா ஒளிப்பதிவை கவனிக்கிறார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்