April 1, 2023 5:56 pm

கவிப்பேரரசு வைரமுத்து மணிவிழா: அப்துல்கலாம் கலந்து கொள்கிறார்கவிப்பேரரசு வைரமுத்து மணிவிழா: அப்துல்கலாம் கலந்து கொள்கிறார்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

வெற்றித் தமிழர் பேரவை சார்பில் கவிஞர்கள் திருநாள் கலை இலக்கியத் திருவிழா ஜூலை 13-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோவை கொடீசியா வளாகம் அரங்கில் நிகழ்கிறது. இந்நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக கவிப்பேரரசு வைரமுத்து மணி விழா மற்றும் பத்மபூஷன் விருதுக்கான பாராட்டு விழாவும் நிகழ்கிறது. காலை 10 மணிக்கு மங்கல இசையுடன் இந்த விழா தொடங்குகிறது.

கலை இலக்கிய கருத்தரங்கிற்கு சக்தி நிறுவனங்களின் தலைவர் நா.மகாலிங்கம் தலைமை தாங்குகிறார். முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் முதன்மை விருந்தினராக பங்கேற்கிறார். மலேசிய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை மத்திய துணை அமைச்சர் டத்தோ சரவணன், சென்னை உயர்நீதிமன்ற நீதியரசி விமலா ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். கவிப்பேரரசு வைரமுத்து சிறப்புரை நிகழ்த்துகிறார்.

அதைத் தொடர்ந்து உலகத் தமிழர் வாழ்த்தரங்கமும், கவிப்பேரரசு வைரமுத்து படைப்புகள் குறித்த உரையரங்கமும், நான்கு தலைமுறை இயக்குனர்களின் வாழ்த்தரங்களுக்கும் நடைபெறுகிறது. இதில் தமிழின் முக்கிய படைப்பாளிகள், திரைப்பட இயக்குனர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கின்றனர்.

முன்னதாக ஜூலை 12-ஆம் நாள் கவிப்பேரரசு வைரமுத்து தலைமையில் தமிழ்நடை பேரணி நிகழ்கிறது. காலை 7 மணிக்கு கோவை சிவானந்தா காலனியில் தொடங்கும் இந்த பேரணி வி.கே.கே.மேனன் சாலையில் நிறைவடைகிறது. அதைத் தொடர்ந்து அன்று மாலை 7 மணிக்கு பொன்னேகவுண்டன் புதூர் கிராமத்தில் ஓராண்டுக்குள் 6000 மரக்கன்றுகள் நட்டு ‘வைரவனம்’ உருவாக்கும் திட்டத்தின் தொடக்கவிழா நிகழ்கிறது.

இந்நிகழ்வையொட்டி 60 பள்ளிகளுக்கு கவிப்பேரரசு வைரமுத்துவின் 36 படைப்புகள் அடங்கிய பேழைகள் பரிசளிக்கப்படுகின்றன. தமிழகமெங்கும் கல்லூரி மாணவ-மாணவியருக்கு கவிப்பேரரசு வைரமுத்து படைப்புகள் சார்ந்த இலக்கியப் போட்டிகள் நிகழ்த்தப்பட்டு 60,000 ரூபாய் அளவில் ரொக்கப்பரிசுகள் வழங்கப்படுகின்றனர். 60 தமிழ் ஆர்வலர்கள் இரத்ததானம் வழங்குகின்றனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்