March 24, 2023 3:53 am

சிரியல் ஜோடி நிஜ ஜோடியானர்கள்சிரியல் ஜோடி நிஜ ஜோடியானர்கள்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

விஜய் டி.வி. சீரியல்களில் மிகவும் பிரபலமானது சரவணன் மீனாட்சி தொடர். இதில் செந்திலும், ஸ்ரீஜாவும் ஜோடியாக நடித்து வந்தனர். முதலில் மதுரை என்ற தொடரில் இவர்கள் இருவரும் ஜோடியாக நடித்தார்கள். அதன்பிறகு இருவரும் சேர்ந்து சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து வந்தார்கள். இத்தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.

இந்தத் தொடரில் இவர்கள் நடிக்கும் போதே பலரும் உண்மையிலேயே இவர்கள் கணவன் மனைவிதான் என நினைத்து வந்தனர். தற்போது அது நிஜமாகிவிட்டது.

இருவரும் சமீபத்தில் திருப்பதியில் ரகசியமாய் திருமணம் செய்து கொண்டுள்ளனர். செந்திலின் நெருக்கமான நண்பர்கள் மட்டுமே இத்திருமணத்தில் கலந்து கொண்டதாகத் தெரிகிறது. இவர்களின் திடீர் திருமணம் அனைவருக்கும் அதிர்ச்சியளித்திருக்கிறது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்