லதா ரஜினி என்று கையில் பச்சைக்குத்திய சௌந்தர்யா! லதா ரஜினி என்று கையில் பச்சைக்குத்திய சௌந்தர்யா!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா. இவர் ரஜினிகாந்தை வைத்து ‘கோச்சடையான்’ படத்தை இயக்கினார். இதில் ரஜினிக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்திருந்தார். மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் உருவான இப்படத்தை சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலகத்தினரும் வியந்து பாராட்டினர்.

தந்தை ரஜினிகாந்த், தாய் லதா ஆகியோரின் மீது நீங்காத பாசத்தைக் கொண்ட இவர், தற்போது அவர்களின் மீது உள்ள பாசத்தின் வெளிப்பாடாக தனது கையில் லதா ரஜினி என்று பச்சை குத்தியுள்ளார். இதனை புகைப்படமாக எடுத்து தனது டுவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.

சௌந்தர்யா, தமிழ் சினிமாவில் கிராபிக்ஸ் வடிவமைப்பாளர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆவார். ஒரு கிராபிக்ஸ் வடிவமைப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய சௌந்தர்யா, பின்னர் ரஜினிகாந்த் நடித்த படங்களில் தலைப்புகளை வடிவமைக்கத் தொடங்கினார். அதன்பின் கோவா திரைப்படத்தின் மூலம் திரைப்பட தயாரிப்பாளராகவும் ஆனார். ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் திரைப்படத்தில் ஒரு இயக்குனராகவும் அறிமுகமானார்.

ஆசிரியர்