நடிகர் சிம்புவின் அதிரடி அறிவிப்பு நடிகர் சிம்புவின் அதிரடி அறிவிப்பு

‘யங் சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்தை தாம் துறப்பாகதாக, நடிகர் சிம்பு திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட செய்தியில், “தன்னையறிதல் என்ற நோக்கத்துக்காக, எனக்கு நானே சில வரையறைகளை வகுத்துக்கொள்ள, நான் ஆன்மிகப் பாதையில் ஈடுபட்டுள்ளேன்.

அதன் முதல் முயற்சியாக, ஈகோவுக்கு வழிவகுக்கும் தேவையில்லாத விஷயங்களை துறக்க முடிவு செய்துள்ளேன். அதன்படி, ‘யங் சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்தைத் துறக்கிறேன்.

எனது தொழிலின் முக்கியமான கட்டத்தை நான் எட்டியுள்ளதால், என்னைச் சுற்றி உருவாகியிருக்கும் பிம்பத்தைப் பற்றியும், அது என் ரசிகர்களிடம் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றியும் உணர்கிறேன்.

சமுதாய அக்கறையுள்ள ஒருவனாகப் பார்க்கும்போது, இத்தகையப் பட்டங்கள் வளர்ந்து வரும் ஒரு தனி நபரின் மேல் ஏற்படுத்தும் பாதிப்பையும் புரிந்து கொண்டுள்ளேன்.

பொதுமக்களிடம் நற்பெயரும், பாராட்டும் பெறுவது முக்கியம் என்பதை கருத்தில் கொண்டுள்ளேன். எனது இந்த முடிவு, அதற்கான முதல் படியாக அமையும் என நினைக்கிறேன். இவ்வளவு நாட்களாக என்னை ஆதரித்து வரும் என் ரசிகர்கள் எனது இந்த முடிவையும் ஆதரிப்பார்கள் என திடமாக நம்புகிறேன்” என்று நடிகர் சிம்பு கூறியுள்ளார்.

ஆசிரியர்