April 2, 2023 4:34 am

நடிகர் திலகத்தின் 13–வது நினைவு நாள்நடிகர் திலகத்தின் 13–வது நினைவு நாள்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

சிவாஜி கணேசனின் 13–வது நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் சிவாஜி உருப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், முன்னாள் தலைவர் குமரி அனந்தன் ஆகியோர் சிவாஜி உருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

பொது செயலாளர்கள் சக்தி வடிவேலு, கே.சிரஞ்சீவி, மாவட்ட தலைவர்கள் ராயபுரம் மனோ, என்.ரங்கபாஷ்யம், நிர்வாகிகள் நம்பி, வெங்கடேஷ், சிவாஜி சமூக நலப்பேரவை தலைவர் சந்திரசேகரன், கொண்டல்தாசன் உள்ளிட்ட பலர் மலர் தூவி வணங்கினர். அண்ணாசாலையில் சிவாஜி சிலைக்கு அவரது மகன் பிரபு மாலை அணிவித்தார்.

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், சிவாஜி சமூக நல பேரவை தலைவர் சந்திரசேகரன் ஆகியோரும் மாலை அணிவித்தனர். உடல் ஊனமுற்ற பெண்களுக்கு சிவாஜி சமூக நல பேரவை சார்பில் செயற்கை காலை சந்திரசேகரன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் துரைராஜ், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தலைவர்கள் சங்குராஜன், சீனிவாசன் மற்றும் மங்கையற்கரசி, கிண்டி ராணி பங்கேற்றனர். கபாலீஸ்வரர் கோவிலில் சிவாஜி சமூக நலபேரவை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்து. தமிழ்நாடு வழக்கறிஞர் சங்க தலைவர் பிரபாகரன், வக்கீல் செந்தில் குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்