50 ஆயிரம் ரசிகர்கள் லைக் செய்துள்ள ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட உருக்கமான பாடல்!! 50 ஆயிரம் ரசிகர்கள் லைக் செய்துள்ள ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட உருக்கமான பாடல்!!

ஹாலிவுட் படங்களுக்கு இசையமைத்து வரும் ஏ.ஆர்.ரகுமான், மரியான், கோச்சடையான் படங்களைத் தொடர்ந்து வசந்தபாலன் இயக்கத்தில் சித்தார்த் நடித்துள்ள காவியத்தலைவன் படத்திற்கும் இசையமைத்துள்ளார். நாடக கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் மொத்தம் 22 பாடல்கள் உள்ளதாக அப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ரகுமான் தெரிவித்தார்.

அந்த படம் வருகிற 31-ந்தேதி ஆடியோ ரிலீசுக்கு தயாராகி விட்டது. இப்படத்துக்காக தான் இசையமைத்துள்ள ஒரு உருக்கமான பாடலை தனது சவுண்ட் க்ளவுட் அக்கவுண்டில் தற்போது வெளியிட்டுள்ளார் ரகுமான். மகாபாரத கதையை தழுவி அப்பாடல் எழுதப்பட்டுள்ளதாம்.
உலகமே யுத்தம் எதற்கு
ஓ உயிர்களே ரத்தம் எதற்கு
ஓ இறைவனே துயரம் எதற்கு
ஓ இதயமே வன்மம் எதற்கு
-என்று தொடங்கும் அந்த பாடலின் இறுதியில், போரை நிறுத்து போரை நிறுத்து -என்ற வார்த்தைகளுடன் பாடல் முற்று பெறுகிறது.
தற்போது இஸ்ரேல்-ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் போர்கள் நடைபெற்று வரும் வேளையில், இந்த பாடல் வரிகள் அதற்கு பொருத்தமாக இருப்பதால், ரகுமான் இந்த பாடலை வெளியிட்ட இரண்டே நாட்களில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் ரசிகர்கள் லைக் செய்துள்ளார்களாம்.

ஆசிரியர்