மெரீனா கடற்கரையில் தசை சிதைவு நோய் விழிப்புணர்வு பேரணியில் விஜய் சேதுபதி!மெரீனா கடற்கரையில் தசை சிதைவு நோய் விழிப்புணர்வு பேரணியில் விஜய் சேதுபதி!

குழந்தைகளை தாக்கும் நோய்களுள் ஒன்று தசை சிதைவு நோய்.

பூமியில் பிறக்கும் 3000 குழந்தைகளில் ஒரு குழந்தை இந்த நோயால் பாதிக்கப்படுகிறது என்று ஒரு புள்ளி விவர கணக்கு கூறுகிறது. இந்த நோய் தாக்கிய குழந்தைகள் எழுந்து நடக்க கூட சக்தியின்றி அடிக்கடி கீழே விழுவார்களாம். அதுமட்டுமின்றி காலப்போக்கில் அவர்களின் வாழ்க்கை சக்கர நாற்காலியிலேயே கழிந்துவிடும் அபாயமும் உண்டமாம்.

இந்நிலையில் தசை சிதைவு நோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ‘ஜீவன் பவுண்டேசன்’ என்கிற அமைப்பு ஒரு விழிப்புணர்வு பேரணியை சென்னையில் நடத்த இருக்கிறது. ‘மயோரேலி’ எனப்படும் இந்த பேரணி ஆகஸ்ட்-3ஆம் தேதி சென்னை மெரீனா கடற்கரையில் காலை 7 மணிக்கு தொடங்குகிறது.

இந்தப் பேரணியில் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான குழந்தைகளுடன் திரையுலக நட்சத்திரங்களான விஜய் சேதுபதி, வரலட்சுமி, காயத்ரி ஆகியோரும் கலந்துகொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளனர்.

ஆசிரியர்