மனைவி ஜீவனாம்சம் கேட்கவில்லை ஹிர்த்திக் ரோஷன் டிவிட்டரில் மறுப்பு மனைவி ஜீவனாம்சம் கேட்கவில்லை ஹிர்த்திக் ரோஷன் டிவிட்டரில் மறுப்பு

தன்னிடம் விவாகரத்து பெற ரூ.400 கோடி தொகையை ஜீவனாம்சமாக சூசன்னே கேட்டதாக வந்த செய்திகள் உண்மை இல்லை என்று ஹிர்த்திக் ரோஷன் விளக்கம் அளித்துள்ளார்.

 

இந்தி நடிகர் ஹிர்த்திக் ரோஷன் – சூசன்னே தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாக இரு தரப்பினரும் கடந்த வருடம் விவாகரத்து செய்ய முடிவெடித்துள்ளதாக அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து, பிரிந்து வாழ்ந்து வந்த அவர்கள் விவாகரத்து பெற நீதிமன்றத்தை நாடி, இரு தரப்பிலும் தங்களது சம்மததை தெரிவித்தனர்.

இதனை அடுத்து, விவாகரத்துக்கு சம்மதிக்க, தனக்கு ஹிர்த்திக் ரோஷன் ரூ.400 கோடி ஜீவனாம்சம் தர வேண்டும் என்று சூசன்னே கேட்டதாக ஊடகங்களில் தகவல் வெளியாயின.

இந்த நிலையில், இதற்கு நடிகர் ஹிர்த்திக் ரோஷன், சுசன் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான செய்திகள் வெறும் வதந்தி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஹிர்த்திக் ரோஷன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, “திரிக்கப்பட்ட செய்திகள் என்னை வெறுப்படைய செய்கின்றன. என் காதலியின் நற்பெயரை பாதிப்பதாக உள்ளது. எனது பொறுமையை சோதிக்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஹிர்த்திக் – சூசன்னே ஆகியோருக்கு நெருங்கிய தொடர்புடைய நண்பர்கள் இது குறித்து கூறும்போது, “இருவருக்கு நடுவே என்றுமே பணம் ஒரு முக்கிய விஷயமாக கருதப்பட்டதில்லை. நீதிமன்றத்திலும் இதுதொடர்பாக எந்த கோரிக்கையும் விடுக்கப்படவில்லை. ஹிர்த்திக் தனது குடும்பம் அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்க அனைத்து விதமான முயற்சிகளையும் எடுப்பார்.

அது போலவே, சூசன்னேவும் தனது துறையில் பணிபுரிந்து, தனி மனிதராக தனது நிதி தேவைகளை தானே பூர்த்தி செய்யும் அளவில் தான் இருக்கிறார். இருவருக்கும் நிதி தொடர்பான பிரச்சினைகள் வர வாய்ப்பே இல்லை” என்று கூறியுள்ளனர்.

ஆசிரியர்