சரியான போட்டி பார்த்திபனுக்கும் சூர்யாவுக்கும் சரியான போட்டி பார்த்திபனுக்கும் சூர்யாவுக்கும்

பார்த்திபன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’. முற்றிலும் புதுமுகங்கள் நடித்திருக்கும் இப்படத்தில், ஆர்யா, விஷால், விஜய் சேதுபதி, அமலாபால், டாப்சி என முன்னணி நட்சத்திரங்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படம் ஆகஸ்ட் 1-ம் தேதியே வெளியிடப்போவதாக அறிவித்திருந்தார் பார்த்திபன். ஆனால், அன்றைய தேதியில் சித்தார்த்தின் ‘ஜிகர்தண்டா’, ‘சரபம்’, ‘சண்டியர்’ ஆகிய படங்கள் வெளியான காரணத்தினாலும், தியேட்டர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்ததை மனதில் வைத்தும் படத்தை ஆகஸ்ட் 22-ந் தேதி வெளியிடப் போவதாக அறிவித்தார்.

இந்நிலையில், தற்போது இப்படத்தை ஆகஸ்ட் 15-ல் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். அன்றைய தேதியில்தான் சூர்யாவின் ‘அஞ்சான்’ படமும் வெளிவருகிறது. எனவே, சூர்யாவுடன் போட்டி போடுவது என தைரியமாக களத்தில் குதித்துள்ளார் பார்த்திபன்.

இதைப்பற்றி விக்ரம் பிரபுவின் ‘சிகரம் தொடு’ ஆடியோ வெளியீட்டில் பார்த்திபன் பேசும்போது, ‘அஞ்சான்’ படம் என்பது கோட்டையில் ஏற்றக்கூடிய கொடி. என்னதான் கோட்டையில கொடி ஏத்துனாலும், எல்லோரும் தங்களுடைய சட்டைப் பையிலும் கொடியை குத்திக் கொள்வார்கள். அந்தமாதிரி சட்டையில் குத்திக்கொள்கிற மாதிரியான கொடிதான் என்னுடைய படம்.

ஆசிரியர்