April 1, 2023 6:28 pm

ஸ்ருதிஹாசன் இந்தியில் ஹீரோயினாக அறிமுகமாகும் அக்ஷராஹாசனுக்காக பாடல் பாடுகிறா ஸ்ருதிஹாசன் இந்தியில் ஹீரோயினாக அறிமுகமாகும் அக்ஷராஹாசனுக்காக பாடல் பாடுகிறா

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

கமலுக்கு ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஹாசன் என இரண்டு மகள்கள். இவர்களில் ஸ்ருதிஹாசன் முறைப்படி இசை பயின்று இசையமைப்பாளராக ஆசைப்பட்டார். ஆனால், அவருக்கு நடிப்புதான் கைகொடுத்தது.

இதையடுத்து, பல படங்களில் நடித்து வரும் ஸ்ருதி ஹாசன், நட்புக்காக சில படங்களில் ஒரு பாடலும் பாடிக் கொடுத்து வருகிறார். இந்நிலையில், இவரது தங்கை அக்ஷராஹாசன் இந்தியில் ஹீரோயினாக அறிமுகமாகும் ‘ஷமிதாப்’ என்ற படத்தில் ஒரு பாடல் பாடுகிறாராம்.

இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார். இவரது இசையில் ஹிந்துஸ்தானி பாடலை பாடவிருக்கிறாராம் ஸ்ருதிஹாசன். ஸ்ருதிஹாசன் இந்தியில் பாடும் 2-வது பாடல் இதுவாகும். ஏற்கனெவே, சோனாக்சி சின்ஹாவுக்காக தீவார் என்ற படத்தில் ரொமான்டிக் பாடல் ஒன்றை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஷமிதாப்’ படத்தில் அமிதாப்பச்சன், தனுஷ், அக்ஷரா ஹாசன் ஆகியோர் நடித்து வருகின்றனர். பிரபல இயக்குனர் பால்கி இயக்கி வருகிறார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்