March 29, 2023 2:23 am

தற்போது ‘வீரபாண்டிய கட்டபொம்மன்‘ படமும் டிஜிட்டலில்தற்போது ‘வீரபாண்டிய கட்டபொம்மன்‘ படமும் டிஜிட்டலில்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

சிவாஜிகணேசன் நடித்த ‘கர்ணன்‘, ‘பாசமலர்‘, ‘வசந்த மாளிகை‘ படங்கள் ஏற்கனவே டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டன. இப்படங்கள் வசூல் ஈட்டியது. ‘கர்ணன்‘ படம் சென்னையில் 150 நாட்கள் ஓடியது. இப்படத்தின் வசூல் கோடியை தாண்டியது.

தற்போது ‘வீரபாண்டிய கட்டபொம்மன்‘ படமும் டிஜிட்டலில் மாற்றப்பட்டுள்ளது. காட்சிகள் மற்றும் ஒலி அமைப்புகளும் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. விரைவில் தமிழகம் முழுவதும் இப்படம் ரிலீஸ் செய்யப்படுகிறது.

வீரபாண்டிய கட்டபொம்மன் படம் 1959–ல் வெளியானது. இதில் சிவாஜி ஜோடியாக வரலட்சுமி நடித்து இருந்தார். ஜெமினிகணேசன், பத்மினி, வி.கே.ராமசாமி ஆகியோரும் நடித்தனர். பி.ஆர்.பந்துலு இயக்கினார்.

வீரபாண்டிய கட்டபொம்மனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது. இதில் இடம் பெற்ற ‘அஞ்சாத சிங்கம் என் காளை’, ‘இன்பம் பொங்கும் வெண்ணிலா’, போகாதே போகாதே என் கணவா உள்ளிட்ட பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்