ஜோதிகா நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ என்ற மலையாள பட ரீமேக்கில் நடிக்கிறார். ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்தார். இப்படம் கேரளாவில் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்தது.
இபபடத்தின் தமிழ் ரீமேக்கில் ஜோதிகா நடிக்க இதன் பட வேலைகள் முடிந்துள்ளன. டப்பிங், ரீரிக்கார்டிங் பணிகள் நடந்து வருகின்றன. இந்த படத்துக்கு தமிழில் என்ன பெயர் வைக்கலாம் என பரிசீலிக்கப்பட்டது. தற்போது. ‘36 வயதினிலே’ என்ற தலைப்பை தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
36 வயதுள்ள ஒரு பெண் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களே கதை. பயந்த சுபாவத்தால் தவிக்கும் அப்பெண் தன்னை கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றி ஜனாதிபதியிடம் விருது பெரும் அளவுக்கு வாழ்க்கையில் முன்னேறி எப்படி சாதனை படைக்கிறார் என்பதே கதை.
எனவே ‘36 வயதினிலே’ என்ற தலைப்பு படத்துக்கு பொருத்தமாக இருக்கும் என்று படக்குழுவினர் கருதுகிறார்கள். பாரதிராஜா இயக்கத்தில் ‘16 வயதினிலே’ என்ற பெயரில் எடுத்த படம் வெற்றிப்படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.