தெண்டுல்கர், அஞ்சலி தம்பதிக்கு சாரா என்ற மகளும், அர்ஜுன் என்ற மகனும் உள்ளனர். சாராவுக்கு 18 வயது ஆகிறது. பொது விழாக்களுக்கு சாராவை தெண்டுல்கர் அழைத்து செல்கிறார். அவரை இந்தி பட தயாரிப்பாளர்கள் சிலர் தங்கள் படங்களில் கதாநாயகியாக அறிமுகப்படுத்த விருப்பம் தெரிவித்து உள்ளனர்.
சாராவும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. நடனமும் கற்கிறாராம்.
கமலின் இரண்டாவது மகள் அக்ஷரா சமீபத்தில் ஷமிதாப் இந்தி படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறப்பாக நடித்து பாராட்டையும் பெற்றார். இதில் அமிதாப்பச்சன் முக்கிய கேரக்டரில் நடித்தார். இதுபோல் பெரிய நடிகர் படத்தில் அறிமுகமாக சாரா விரும்புகிறாராம். தெண்டுல்கரும் மகள் நடிகையாவதற்கு சம்மதம் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது. தற்போது கதை கேட்க துவங்கியுள்ளனர். கதாநாயகியாக நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.