பட அதிபர் வருண் மணியனுக்கும், திரிஷாவுக்கும் ஏற்கனவே திருமணம் நிச்சயமானது. வருண்மணியன் வீட்டில் திருமண நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது. இந்த வருடம் இறுதியில் திருமணத்தை முடிக்க திட்டமிட்டு இருந்தனர்.
இந்த நிலையில் திடீரென இந்த திருமணம் ரத்தாகியுள்ளது. இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.
திரிஷா சினிமாவில் தொடர்ந்து நடிப்பதே பிரிவுக்கு காரணம் என கூறப்பட்டது. சினிமாவில் இருந்து விலகும்படி மணமகன் தரப்பில் வற்புறுத்தப்பட்டதாகவும், அதை திரிஷா ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
திருமணம் நின்று போனதால் திரிஷாவுக்கு நிறைய படங்களில் நடிக்க அழைப்பு வருகிறதாம். தமிழ், தெலுங்கு பட வாய்ப்புகள் குவிகிறது என்கின்றனர்.
தமிழ், தெலுங்கில் தயாராகும் போகி படத்தில் நடிக்கிறார். செல்வராகவன் இயக்கும் படத்தில் சிம்பு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். கமல் ஜோடியாக நடிக்கவும் தேர்வாகியுள்ளார்.
பூலோகம், அப்பாடக்கர் படங்களில் நடித்து முடித்துள்ளார். இப்படங்கள் ரிலீசுக்கு தயாராகிறது.