விடுதலைப் புலிப் போராளி ஒருவனின் சினத்தை வெளிப்படுத்தும் ‘தனிமரம் ஒன்று காற்றினில் ஆட..’ என்ற சினம்கொள் திரைப்படத்தின் பாடல் வெளியாகி வைரலாகி வருகின்றது. முழுக்க முழுக்க ஈழத்தில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட இந்த படத்தின் பின் தயாரிப்பு வேலைகள் சென்னையில் நடைபெற்றது.
bakialakhmi talkies என்ற சென்னையை சேர்ந்த திரைப்பட நிறுவனம் வெளியிடும் இத் திரைப்படம் எதிர்வரும் ஜனவரி 3ஆம் திகதி உலகமெங்கும் வெளியிடப்படவுள்ளது. இந்த நிலையில் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘தனிமரம் ஒன்று காற்றினில் ஆட..’ பாடல் வெளியாகி பெரும் வரவேற்றை பெற்று வருகின்றது.
கனடாவை சேர்ந்த ஈழத் தமிழரான ரஞ்சித் ஜோசப் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். இசையை இந்திய இசையமைப்பாளர் என்.ஆர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார். பாடல்கள் மற்றும் வசனத்தை ஈழத்தை சேர்ந்த கவிஞர் தீபச்செல்வன் எழுதியுள்ளார். அத்துடன் ஒளிப்பதிவு பணியை பழனிகுமார் மாணிக்கமும் படத்தொகுப்பை சிவலிங்கம் அருணாச்சலமும் மேற்கொண்டுள்ளனர்.
இன்று வெளியான பாடல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது. ஆழமான வரிகளால் அமைந்த இந்தப் பாடல் விடுதலைப் புலிப் போராளி ஒருவனின் இன்றைய நிலைப் பேசுகின்றது. அத்துடன் பாடலில் இடம்பெற்ற காட்சிகளும் திரைப்படம் குறித்த பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விதமாக அமைகின்றது.
இதோ பாடல் இணைப்பு..