பல வித்தியாசமான படங்களை தெரிவு செய்த்து நடிக்கும் கதாநாயகி பார்வதி இன்று படவாய்ப்புகள் பெரிதாக இல்லாமல் காணப்படும் நிலைமை காணப்படுகின்றது .
இதற்கு மோகன்லால், மம்முட்டி உள்ளிட்ட நடிகர்களுடன் மோதல் போக்கை கடைபிடிப்பதும் ஒரு காரணம் ஆனாலும் அதைப்பற்றி எல்லாம் பார்வதி கவலைப்பட்டதாக தெரியவில்லை. தன்னை தேடிவந்து கதை சொன்ன இயக்குனர் வேணுவுக்கு உடனடியாக கால்ஷீட் தந்து ராச்சியம்மா என்கிற படத்தில் நடித்துள்ளார் பார்வதி.
இப்போது இன்னும் புது வேடத்தில் மக்களை அசத்த நடித்து வருகிறார் .ராச்சியம்மா என்பது ஒரு குறும்படமாக உருவாகியுள்ளது. 4 குறும்படங்களை ஒன்றிணைத்த ஆந்தாலஜி படத்தில் இதுவும் ஒரு படம்.. இது சாகித்திய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் உரூப்பின் ராச்சியம்மா என்கிற சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.