Man vs Wild நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பங்கேற்கவுள்ளார்.
டிஸ்கவரி அலைவரிசையில் பியர் கிரில்ஸ் (Bear Grylls) என்பவர் தொகுத்து வழங்கும் Man vs Wild நிகழ்ச்சி சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரையும் தன்பக்கம் ஈர்த்துள்ளது.
பாரிய காட்டுப்பகுதியில் இறக்கிவிடப்படும் Bear Grylls தனக்கான உணவைத் தேடி உயிர் வாழ்வதே இந்நிகழ்ச்சியின் சாராம்சமாகும்.
இந்த நிகழ்ச்சியில் நரேந்திர மோடி கடந்த வருடம் பங்கேற்றார்.
அதேபோன்று 2016ஆம் ஆண்டு பராக் ஒபாமாவும் கலந்துகொண்டிருந்தார்.
இந்நிகழ்ச்சியில் அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.