பாலிவுட் மற்றும் இந்திய நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் டோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த பிரபல இந்தி நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
34 வயதான அவரின் இந்த முடிவு திரை உலகத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திரைப்பிரபலங்கள் பலரும் இது உண்மை தானா? நம்ப முடியவில்லை என்று டுவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.