கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜூலி, ‘ஜல்லிக்கட்டு’ போராட்டத்தின்போது ஒட்டுமொத்த தமிழர்களிடையே பெற்ற பெரும் புகழை இழந்தார் என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு எதிராக ஜூலி செயல்பட்டதால் அந்நிகழ்ச்சியில் அதிகம் வெறுக்கப்பட்ட ஒரு போட்டியாளராக கருதப்பட்டார்
இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு ஒருசில திரைப்பட வாய்ப்புகளும், தொலைக்காட்சி வாய்ப்புகளும் கிடைத்தது. ஜூலி நடித்து முடித்துள்ள ‘அம்மன் தாயி’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் வட இந்திய தொழிலதிபர் ஒருவருடன் ஜூலி, லிவிங் ரிலேஷனில் இருப்பதாகவும் கடற்கரையில் இருவரும் ஒன்றாக இருந்தபோது போலீசாரிடம் பிடிபட்டதாகவும் ஊடகம் ஒன்றில் செய்தி வெளியானது. இந்த செய்திக்கு ஜூலி தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
போலி செய்திகளைப் பரப்புவதற்கும், என் பெயரை களங்கப்படுவதற்கும் இதுபோன்ற செய்திகள் வெளியாகின்றன. தயவுசெய்து இது போன்ற நபர்களை யாரும் ஊக்குவிக்க வேண்டாம். இந்த பக்கத்தை அனைவரும் புகார் அளியுங்கள். எனது திருமணம் தொடர்பாக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் அனைத்தும் வதந்தி’ என்று தெரிவித்துள்ளார்.