பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடிப்பில் இசைஞானி இளையராஜா இசையில் உருவான த்ரில்லர் திரைப்படம் ‘சிகப்பு ரோஜாக்கள்’. திரையுலகில் தற்போதைய நவீன வசதிகள் இல்லாத அந்த காலத்திலேயே இந்த படம் ரசிகர்களை மிரள வைத்தது.
இந்த நிலையில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தை பாரதிராஜாவின் மகன் மனோஜ் இயக்கவிருப்பதாகவும், கமல்,ஸ்ரீதேவி வேடங்களில் நடிக்க நடிகர், நடிகை தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது
தமிழ் சினிமாவில் ஏற்கனவே சூப்பர்ஹிட் வெற்றி பல திரைப்படங்களின் இரண்டாம் பாகம் வெளிவந்து, அவற்றில் பெரும்பாலான திரைப்படங்கள் தோல்வி அடைந்துள்ளன. இந்த நிலையில் ‘சிகப்பு ரோஜாக்கள் 2’ திரைப்படம் முதல் பாகத்தைபோல் வெற்றி அடையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
மேலும் ’சிகப்பு ரோஜாக்கள் 2’ படத்தில் கமல் கேரக்டரில் சிம்பு நடிக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை இயக்குனர் மனோஜ் ஏற்பாரா என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்