சிவகார்த்திகேயன் நடித்த, மனம் கொத்தி பறவை படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமான ஆத்மியாவுக்கு திருமணம்.
சிவகார்த்திகேயன் நடித்த, மனம் கொத்தி பறவை படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் ஆத்மியா. இப்படத்தை தொடர்ந்து, போங்கடி நீங்களும் உங்க காதலும் படத்தில் நடித்தார். தற்போது சமுத்திர கனியுடன் வெள்ளை யானை படத்தில் நடித்துள்ளார். மேலும் கொரோனா காலத்தில் கால்சென்டரில் பணி புரிந்து மக்களுக்கு சேவை செய்தார்.
இந்நிலையில் இவருக்கு திருமணம் முடிவாகி உள்ளது. கேரள மாநிலம் கன்னூரைச் சேர்ந்த கப்பலில் பணிபுரியும் சனூப் என்பவரை திருமணம் செய்கிறார். இவர்களது திருமணம் ஜன., 25ல் கன்னூரில் காலை 9.59 மணி முதல் 11.33 மணிக்குள் நடைபெற இருக்கிறது. இது பெற்றோர்கள் பார்த்து முடிவு செய்த திருமணம். ஜன., 26ல் ஸ்டார் ஓட்டலில் திருமண வரவேற்பு மாலை நடக்கிறது.
திருமணத்திற்கு பிறகும் ஆத்மியா நடிக்க சனூப் சம்மதம் சொல்லியிருக்கிறார். மலையாளத்தில் தற்போது இரண்டு படங்களில் நடிக்க கமிட்டாகி உள்ளார் ஆத்மியா.