Friday, October 22, 2021

இதையும் படிங்க

இரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் ‘மோகன்தாஸ்’ பட செகண்ட் லுக்

'களவு' என்ற படத்தைத் தொடர்ந்து இயக்குநர் முரளி கார்த்திக் இயக்கத்தில் தயாராகிவரும் புதிய திரைப்படம் 'மோகன்தாஸ்'.  இப்படத்தில் நடிகர் விஷ்ணு...

6 ஆண்டுகள் ஆகிவிட்டது – விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி!

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குனராக அறிமுகமான படம் போடா போடி. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு ‘நானும் ரவுடி தான்’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இதில் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி,...

நாயகியாக களமிறங்கும் கோவை சரளா

பல படங்களில் காமெடி வேடம் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து அசத்திய கோவை சரளா, தற்போது நாயகியாக களமிறங்க இருக்கிறார். தமிழ் சினிமாவில் கடந்த 40...

வழக்கறிஞராக களமிறங்கும் வரலட்சுமி சரத்குமார்!

நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி, விக்னேஷ் சிவன் இயக்கிய ‘போடா போடி’ படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து ஹீரோயினாக மட்டுமல்லாது வில்லி வேடங்களிலும் துணிச்சலாக நடித்து...

பாடகி சித்ராவுக்கு கோல்டன் விசா வழங்கியது ஐக்கிய அரபு அமீரகம்!

அமீரக அரசு கடந்த 2019-ம் ஆண்டு விசா வழங்கும் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தது. இதன் ஒரு பகுதியாக அமீரகத்தில் வசிக்க விரும்பும் வர்த்தகர்கள், விளையாட்டு வீரர்கள், திரைபிரபலங்கள்,...

மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார் நடிகை சமந்தா

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும்...

ஆசிரியர்

உலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான மம்முட்டியின் 50 ஆண்டு திரைப்பயணம்

கடவுளின் தேசம் என்ற பிற மாநிலத்தவர்களால் அழைக்கப்படும் கேரளாவில் இயற்கை எழிலோடு இருக்கும் அம்மண்ணும் எதையும் முற்போக்காக அணுகக் கூடிய அம்மக்களும் சினிமாவை சினிமாவாக பார்த்தாலும் வாழ்வில் எல்லோரையும் போலவே அவர்களுக்கும் ஒரு பொழுதுபோக்கு தேவைப்படுகிறது. அப்படி அவர்களுக்கு துயரங்களை மறந்து ரசிப்பதற்கும் மகிழ்வதற்கும் சினிமா என்ற மிகப்பெரிய ஊடகமே உலகில் உள்ள மனிதர்களுக்கெல்லாம் அருமருந்தாக உள்ளது.

தென் மாநிலங்களாகட்டும், வட மாநிலங்களாகட்டும் மக்கள் தங்கள் ஆதர்ச நாயகர்களை திரையில் கண்டாலே கொண்டாடித் தீர்த்து விடுவார்கள். ஆம் தமிழ்நாட்டில் நமக்கு எப்படி கமல், ரஜினி சூப்பர் ஸ்டாரோ அதுபோல கேரளத்தில் சேட்டன்கள் அனைவரும் அன்போடு அழைக்க கூடிய மம்முக்கா என்ற மம்மூட்டியும் மோகன்லாலும் தான் அங்கு சூப்பர் ஸ்டார்கள். இப்படி எல்லோராலும் செல்லமாக மம்முக்கா என்று அழைக்கப்படும் நடிகர் “மம்முட்டி” அவர்கள் மலையாள சினிமாவான மல்லுவுட்டில் தனது 50ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். 

வாருங்கள் நம் மம்முக்கா திரைத்துறையில் கடந்து வந்த பாதையை பார்ப்போம்:

மம்முட்டி அவர்கள் 1971இல் கே. எஸ் சேதுமாதவன் இயக்கத்தில் “அனுபவங்கள் பாலிச்சிகள் என்ற திரைப்படத்தில் முதன் முதலாக தோன்றினார்.

இந்த படத்தில் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் பெரிதாக பேசப்படவில்லை. பிறகு 1973 இல் வெளிவந்த காலச்சக்கரம் திரைப்படத்தில் இவருக்கு இயக்குனர் பிரேம் நசீர் வாய்ப்பு கொடுத்தார். சிறு சிறு வேடம் ஏற்று நடித்து வந்த மம்முட்டிக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் 1980-ஆம் ஆண்டு எம். டி வாசுதேவன் நாயர் எழுதி எம் ஆசாத் இயக்கிய வீல்கணுன்டு ஸ்வப்னங்கள் (Vilkanandu Swapnangal) திரைப்படம் தான் இவருக்கு  கதாநாயகன் என்ற சிறப்பினை பெற்று தந்தது.

அதற்கடுத்த ஆண்டு 1982இல் வெளியான துப்பறியும் த்ரில்லர் கதைக்களம் கொண்ட யவனிகா திரைப்படத்தில் “மம்மூட்டி அவர்கள் காவல்துறை அதிகாரி வேடத்தில் சிறப்பாக நடித்து பலரது பாராட்டினையும் பெற்றார்.

இப்படத்தில் நேர்மையான காவல்துறை அதிகாரியாக படம் முழுக்க வலம் வந்து தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் அடுத்தடுத்து படங்களில் காவல்துறை அதிகாரி மற்றும் துப்பறியும் படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

Rajinikanth

மலையாள சினிமாவில் வணிக ரீதியாக இவருக்கு இரு படங்கள் பெயரை பெற்றுக் கொடுத்தது. பத்மராஜனின் “கூடேவிதே (Koode Vidhe) மற்றும் ஜோசியின் ஆராத்திரி இவ்விரு படங்களுமே பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியை தந்தது என்றே சொல்லலாம்.

பின்பு 1982 முதல்  1986 இந்த ஐந்தாண்டு கால கட்டத்தில் மம்முட்டி அவர்கள் கதாநாயகனாக 150 படத்திற்கு மேல் நடித்து குவித்திருந்தார்.

“மம்முட்டி அவர்கள் மலையாளம், தவிர தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். 1989 இல் கே.மதுவின் இயக்கத்தில் மௌனம் சம்மதம் திரைப்படத்தின் மூலம் தமிழிலும் தடம் பதித்தார்.

மறைந்த மூத்த இயக்குனர் கே. பாலச்சந்திரன் இயக்கத்தில் அழகன் படத்திலும் அதற்கு அடுத்து மணிரத்தினத்தின் தளபதி படத்தில் இவர் ஏற்று நடித்த தேவா கதாப்பாத்திரம் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. தளபதி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடிகர் மம்முட்டியும் கலக்கியிருப்பார். இப்படத்தில் இவர்கள் இருவரின் நட்பு பற்றிய காட்சியும், இளையராஜாவின் பின்னணி இசையும் படத்திற்கு பெரும் பலம் சேர்த்தது என்றால் அது மிகையாகாது.

அதுவும் காட்டுக் குயில் மனசுக்குள்ளே என்ற பாடல் இன்றளவும் நண்பர்கள் தினத்தன்று ஒருவருக்கொருவர் வாட்சஅப் ,ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் ஸ்டேட்டஸ் வைத்துக் கொள்கிறார்கள்.எனில் அது எந்தளவுக்கு ரீச் ஆகியிருக்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும்.

ஒருமுறை மேடை ஒன்றில் நடிகர் மம்முட்டியிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி நீங்கள் ஏற்று நடித்த கதாபாத்திரங்களிலேயே மிகவும் சவாலான கதாபாத்திரம் என்ன என்று கேட்ட பொழுது சற்றும் யோசிக்காமல் “டாக்டர் அம்பேத்கர் திரைப்படத்தில் நடித்த அம்பேத்கர் கதாபாத்திரம் தான் என்றார்.

இப்படி தனது 50 வருட திரைப்பயணத்தில் 3 முறை தேசிய விருதும் 10 முறை ஃபிலிம்ஃபேர் விருதும் கேரள மாநில அரசு  விருதினை 10 முறையும் ஏசியா நெட் விருதினை 5முறையும் வென்றுள்ளார்.நமது மம்முக்கா அவர்கள்.

வெறுமனே திரையில் மட்டும் நல்லவராக தோன்றாமல் நிஜ வாழ்க்கையிலும் பல நல்ல செயல்களை செய்து வருகிறார். உதாரணத்திற்கு கூறவேண்டுமென்றால் குழந்தைகள் பிச்சை எடுப்பதைத் தவிர்க்கவும், குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும் சில அறக்கட்டளைகள் மூலம் நல்லெண்ணத் தூதராகவும் செயல்படுகிறார்.

இப்படி நிழல் நாயகராக மட்டும் இல்லாமல் நிஜ நாயகராகவும் இருந்து வரும் நடிகர் மம்முட்டி அவர்கள் தனது 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் 350க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மிக உயரிய விருதான “பத்மஸ்ரீ விருதினை 1998 ஆம் ஆண்டு அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. இன்னும் தனது திரைப்படங்கள் மூலம் மக்களை மகிழ்விக்க வேண்டும் என்பதே மற்றவர்களைப் போலவே நமது எண்ணமும் கூட வாழ்த்துக்கள் மம்முக்கா.

நன்றி : zeenews.india.com

இதையும் படிங்க

நயன்தாரா படம் மூலம் நடிகையாக அறிமுகமாகும் கலா மாஸ்டர்!

பிரபல நடன இயக்குனரான கலா மாஸ்டர், தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட பல்வேறு மொழி படங்களில் பணியாற்றியுள்ளார். ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு அவர் நடனம் அமைத்துள்ளார். இதுதவிர சின்னத்திரையிலும் மானாட...

திடீரென ஆன்மீக சுற்றுலா சென்ற சமந்தா…. அதுவும் யார் கூட போயிருக்காங்க தெரியுமா?

கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்த நடிகை சமந்தா பற்றி ஏராளமான வதந்திகள் பரவி வருகின்றன. குழந்தை பெற்றுக்கொள்ள மறுத்தார், கருக்கலைப்பு செய்தார், இன்னொருவருடன் தொடர்பு இருந்தது என்றெல்லாம்...

ஓ மணப்பெண்ணே | திரைவிமர்சனம்

நடிகர்ஹரிஷ் கல்யாண்நடிகைபிரியா பவானி சங்கர்இயக்குனர்கார்த்திக் சுந்தர்இசைவிஷால் சந்திரசேகர்ஓளிப்பதிவுகிருஷ்ணன் வசந்த் இன்ஜினியரிங் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் நாயகன் ஹரிஷ்...

எனிமி படத்தை வெளியிட விடாமல் தடுக்கிறார்கள் | தயாரிப்பாளர் வேதனை

விஷால், ஆர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் எனிமி படத்தை வெளியிட விடாமல் தடுக்கிறார்கள் என்று தயாரிப்பாளர் வினோத் வேதனையுடன் பதிவு செய்து இருக்கிறார்.

‘ஊர் குருவி’ படத்தில் கவினுக்கு ஜோடியாகும் சீரியல் நடிகை

கவின் ஹீரோவாக நடிக்கும் ‘ஊர் குருவி’ படத்தை நயன்தாரா - விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமா? | ஆய்வுக் குழுவின் முடிவு

மரணிப்பதற்கு இரு தினங்களுக்கு முன்னர் தான் நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்...

தொடர்புச் செய்திகள்

ரஜினியின் வாழ்க்கை பயணம்

பள்ளி தந்த பக்தி நடிகர் ரஜினிகாந்த் பால்ய பருவத்திலேயே தனது தாயை இழக்க நேரிட்டதால் தனது அண்ணன்,...

ரூ. 100 கோடி வசூல் எல்லாம் இனி கிடையாது: பிரபல இயக்குநர்

ஓடிடி தளங்களில் படங்கள் நேரடியாக வெளியாவதால் திரையரங்கு வசூல் சார்ந்த நட்சத்திர அந்தஸ்து இனி இருக்காது என்று பிரபல இயக்குநர் சேகர் கபூர் கூறியுள்ளார். கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும்...

விஜய்யுடன் பணியாற்ற நான் எப்போதும் தயார்! – யுவன் சங்கர் ராஜா

விஜய்யுடன் ஒர்க் பண்ண தான் எப்போதும் ரெடியாக இருப்பதாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. 1997-ம் ஆண்டு வெளியான அரவிந்தன் படம்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

கானகத்தின் குரல் | ஓர் அனுபவப்பகிர்வு | தாமரைச்செல்வி (படங்கள் இணைப்பு)

எழுத்தாளர் தாமரைச்செல்வி அவர்கள் அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேர்ண் மாநிலத்திலுள்ள Neurum Creek என்னும் இடத்தில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்று வந்த தனது அனுபவ உணர்வுகளை வணக்கம் லண்டன் இணையத்தளத்தில் பகிர்ந்து கொள்கின்றார்.

மறுபக்கம் | சிறுகதை | நிலாவண்ணன்

அது, தைப்பிங் நகரிலுள்ள பெயர் பெற்ற தனியார் மருத்துமனை. சிறப்புப் பிரிவு அதாவது முதல் வகுப்பு. பள்ளியில் முதல் வகுப்பு என்றால் ஆரம்பம் என்று அர்த்தம். இங்கு வேறு மாதிரி....

இளம் வயதில் பாரதிராஜாவுடன் நட்பு ஏற்பட்டது எப்படி | இளையராஜா வெளியிடும் தகவல்கள்

சினிமாவில் நுழைவதற்கு முன்பே (சிறு வயதிலேயே) டைரக்டர் பாரதிராஜாவும் இளையராஜாவும் நண்பர்கள். இவர்களுக்கிடையே நட்புறவு ஏற்பட்டதே சுவையான கதை....

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

கருவில் உள்ள சிசுவின் உடல் எடை அதிகரிக்க உதவும் உணவுகள்

கருவுவில் இருக்கும் போது குழந்தைக்குக் கிடைக்கும் சத்துக்கள்தான் அதன் ஒட்டுமொத்த வாழ்க்கையே தீர்மானிக்கப் போகிறது. பத்து மாதம் கருவில் வளர்ந்து வெளியே வரும்...

பெண்களுக்கு ஏற்ற தொழில்கள்

பெண்கள் என்னென்ன தொழில்கள் செய்யலாம் என்று தெரிந்து கொள்வோம். அதற்கு முன்பாக பெண்கள் சுய தொழில் தொடங்கும்போது நமது தொழிலுக்கான உற்பத்தி பொருளை...

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 15 ஆயிரத்து 759 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 41 இலட்சத்தைக்...

டெல்டா பிளஸ் இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை!

கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாட்டின் புதிய வகையான டெல்டா பிளஸ் இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஸ்ரீ ஜயவர்தனபுர...

இலங்கையில் ஒரு கிலோ கீரி சம்பா அரிசியை 125 ரூபாய்க்கு சந்தைப்படுத்த நடவடிக்கை!

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட கீரி சம்பா அரிசி கிலோவொன்றின் விலை 125 ரூபாய் என்ற ரீதியில் சந்தைப்படுத்தவிருப்பதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி,...

காஷ்மீரில் இணைய சேவைகள் முடக்கம்!

காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளை தடுக்கும் முகமாக அங்கு இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காஷ்மீர் மண்டல காவல்துறை...

துயர் பகிர்வு