நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்தது தொடர்பாக விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன், தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு புகார் மனு அனுப்பியிருந்தார்.
நடிகர் விவேக்கிற்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட விவகாரத்தில் உரிய விதிகள் பின்பற்றப்படவில்லை என்றும், எனவே இது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கேட்டுகொண்டார்.
இந்த புகார் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், சமூக ஆர்வலரின் புகார் மனு மீது 8 வார காலத்திற்குள் விசாரணை நடத்தி, அது குறித்த அறிக்கையை புகார்தாரருக்கு தெரிவிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையம் கூறி உள்ளது.