சென்னை:
சென்னையில் ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். இதில் இயக்குனர் ராஜமவுலி, நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், நடிகை ஆலியா பட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது இயக்குனர் ராஜமவுலி பேசியதாவது:
நான்கு வருடங்களுக்கு பிறகு உங்களை சந்திக்கிறேன். அதனால் அரசியல் பேச வேண்டாம், ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தைக் குறித்து மட்டும் பேசுவோம்.
சென்னை வரும்போது பள்ளி மாணவனைப் போல் உணர்கிறேன். சென்னை எனக்கு ஒரு பள்ளி. அனைத்தையும் கற்றுக் கொடுத்தது.
ஏன் ஹாலிவுட் நடிகர்களை படமெடுக்க வேண்டும்? நம் நடிகர்களே மிகவும் திறமையானவர்கள்தான். நம் நடிகர்களை வைத்து ஹாலிவுட் படமெடுப்போம்.
தமிழில் யாராக இருந்தாலும் என் கதை யாரை ஹீரோவாக தேர்வு செய்கிறதோ அவர்களை தான் நான் இயக்குவேன்.
பாகுபலியைப் போன்றே ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் அனைத்து கதாபாத்திரங்களும் நிச்சயமாக பேசப்படும் என தெரிவித்தார்.