நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வெளிவர காத்திருக்கும் படம் ‘மாறன்’. கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.
மேலும் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, கிருஷ்ணகுமார், மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு விவேகானந் சந்தோஷம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் இப்படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.
தொடர்சியாக இப்படத்தின் அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்திருந்தது. இந்நிலையில் மாறன் படத்தில் இடம்பெற்றுள்ள அடுத்த பாடல் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. “அண்ணனா தாலாட்டும்” என்ற பாடல் நாளை(19.2.2022) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.