தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது வாத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார், இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் உருவாகி வருகிறது.
இந்நிலையில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இரண்டாவதாக வெளியாகியுள்ள திரைப்படம் சாணி காயிதம், இப்படம் நேற்று அமேசான் பிரைம் வெளியாகி இருக்கிறது.
வெளியானது முதல் நல்ல விமர்சனங்களை பெற்று வரும் இப்படம் குறித்து நடிகர் தனுஷும் பதிவிட்டுள்ளார். அதில் “அற்புதமான திரைப்படத்தை கொடுத்த சாணி காயிதம் படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்.
செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நல்ல வேலை செய்துள்ளீர்கள். அருண் மாதேஸ்வரன் உங்களை நினைத்தால் பெருமையாக உள்ளது” என பதிவிட்டுள்ளார்.