Thursday, September 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா சத்யராஜ் நடிக்கும் ‘ஜீப்ரா’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு

சத்யராஜ் நடிக்கும் ‘ஜீப்ரா’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு

1 minutes read

‘புரட்சித் தமிழன்’ சத்யராஜ் ,டாலி தனஞ்செயா ,சத்யதேவ்,  என தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்கள் ஒன்றிணைந்து நடித்திருக்கும் ‘ஜீப்ரா’ எனும் திரைப்படத்தின் மோசன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது.

அத்துடன் இந்த திரைப்படம் தீபாவளி திருநாளன்று பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஜீப்ரா’ எனும் திரைப்படத்தில் சத்யராஜ், டாலி தனஞ்செயா, சத்யதேவ், பிரியா பவானி சங்கர், சுனில், சத்யா, ஜெனிபர் பிசினாடோ, சுரேஷ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சத்யா பொன்மார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார்.

நிதி குற்றத்தை மையப்படுத்தி திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஓல்ட் டவுன் பிக்சர்ஸ் மற்றும் பத்மஜா பிலிம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ். என். ரெட்டி , எஸ். பத்மஜா , பாலசுந்தரம் , தினேஷ் சுந்தரம் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இந்தத் திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பை பிரத்யேக காணொலி மூலம் படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்தத் திரைப்படம் எதிர்வரும் தீபாவளி திருநாளான ஒக்டோபர் 31 ஆம் திகதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More