Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாகவர் ஸ்டோரி தமிழ் சினிமாவின் “துருவநட்சத்திரம்“

தமிழ் சினிமாவின் “துருவநட்சத்திரம்“

3 minutes read

படாத கஷ்டம் பட்டேன் என்று பலர் பேச்சுக்கு சொல்வார்கள் , ஆனால் விக்ரம் உண்மையிலே அப்படி சிரமப்பட்டார். ஆம் பின்னணி குரல் கலைஞராகவே அவர் சினிமா பயணத்தை துவங்கினார். 

அவர் அடுத்து நடிக்கப் போகும் திரைப்படத்தின் பெயர் மட்டுமல்ல அவரே தமிழ் சினிமாவின் துருவநட்சத்திரம் தான். 

படாத கஷ்டம் பட்டேன் என்று பலர் பேச்சுக்கு சொல்வார்கள் , ஆனால் இவரோ உண்மையிலே அப்படி சிரமப்பட்டார்.

ஆம் பின்னணி குரல் கலைஞராகவே அவர் சினிமா பயணத்தை துவங்கினார்.  இவரின் குரலே காதலன் படத்தின் நாயகனுக்கு ஒலிக்கிறது.

துணைநடிகர் , விளம்பர மாடல் என்று தனது திறமைகளை வெளிப்படுத்தும் முயற்சியில் தத்தளித்தவர் பிறகு பல சிரமங்களுக்கு இடையில் குறைந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படமான “என் காதல் கண்மணியை” வில் 1990 ஆம் ஆண்டு நடித்தார். பிறகு ஸ்ரீதர் அவர்களின் “தந்துவிட்டேன் என்னை” , அதை தொடர்ந்து பி.சி.ஸ்ரீராம் இயக்கிய “மீரா” என்று படங்கள் நடித்தாலும் அவர் பிரபலமடையவில்லை.

தமிழில் சரியாக வாய்ப்புக்கள் இல்லாததால் மலையாளம் , தெலுங்கு என்று கிடைத்த வேடத்தில் நடித்து . சிறிய இடைவேளைக்கு பின் புதிய மன்னர்கள் , உல்லாசம் என்று நாயகர்களில்  ஒருவராகவே நடித்தார்.

1999 ஆம் ஆண்டு ஹவுஸ் புல் வெளியானது .  அதுவரை விக்ரமை துரத்திய துன்பங்கள் “ சேது “ படம் மூலம் சற்று நிவர்த்தி ஆயிற்று. அப்படமும் எளிதில் வெளிவரவில்லை வருடக்கணக்கில் தாமதமாகியே வந்தது. படம் வெளியான முதல் வாரம் தோல்விமுகத்தை காமித்தது  , அனால் அவரின் நடிப்பு மக்களை , குறிப்பாக கல்லூரி மாணவர்களை சுண்டி இழுத்தது. 

அது முதல் விக்ரம் “சியான்” விக்ரமாக மாறினார். 

2001 இல் வெளிவந்த விண்ணுக்கும் மண்ணுக்குமிலும் சராசரி கதாபாத்திரம் அமைந்தாலும் . அதே ஆண்டில் வெளியான “தில்” அவருக்கு மிக சிறப்பாக அமைந்தது . காதல் , சண்டை காட்சிகளில் நன்றாகவே ஜொலித்தார்.  படம் பட்டி தொட்டி என்று நன்றாகவே ஓடியது. அவர் பார்வை அற்றவராக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்ற “காசி”யும் அதே 2001 ஆம் ஆண்டு வெளிவந்ததே! 

இப்படி நடிப்பு , கமர்ஷியல் இரண்டிலும் கலக்கி  அதே முழு அர்ப்பணிப்புடன் மேலும் மும்முரமாக பணியாற்ற தொடங்கினார்.  ஜெமினி , தூள் , கிங் , என்று சிறுவர்கள் , கல்லூரிமாணவர்கள் , பெரியவர்கள் என அனைவரையும் தன் பக்கம் இழுத்தார்.   இவரின் மார்க்கெட் எகிறியதால் கிடப்பில் போடப்பட்ட சாமுராய் , காதல் சடுகுடு போன்ற படங்கள் வெளியாகின.

அவரின் நடிப்பும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியது. சாமி படத்தில் நெல்லைக்காவலராக நடித்து அசத்தினார். அதில் அவரின் வசன உச்சரிப்பு , உடல் மொழி வெகுவாக ரசிக்கப்பட்டது . தலைவர் ரஜினியே அப்படத்தின் 125 வது நாள் விழாவில் மனம் விட்டு பாராட்டினார் இந்த ஆறுச்சாமியை!

2003 ஆம் ஆண்டு மீண்டும் பாலாவுடன் இனைந்து “பிதாமகன்” தந்து நடிப்பின் புதிய எல்லைகளை வரையறுத்தார்.தொடர்ந்து அந்நியனில் காண்போர் சிலிர்க்கும் வண்ணம் “பிளவாளுமை” குறைபாட்டுப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பிராமணராக நடித்தார் அதில் “ரெமோ” கதாபாத்திரம் பெண்கள் மத்தியில் மிகவும் வரவேற்பைப் பெற்றது. அப்படத்தில் கதாபாத்திரத்துடன் அவரின் உடலும் சுருங்கி விரிந்தது. 

பீமா படத்திற்காக பகிரத முயற்சி , ராவணனில் பட்ட சிரமங்கள் தக்க பலன்களை தரவில்லை . இதனால் சற்று தடுமாறினாலும் 2011 னில்  வெளிவந்த “ தெய்வத்திருமகளில்” தனது இருப்பை பிரமாதமான நடிப்பின் மூலம் மீண்டும் அழுத்தமாக பதிவு செய்தார்.

எனினும் தாண்டவம் , ராஜபாட்டை , டேவிட் என்று தொடர்ந்து சறுக்கினாலும் மீண்டும் ஷங்கருடன் இனைந்து “ஐ” படம் தந்தார். அதிலும் நடிப்பின் பல பரிமாணங்களை காட்டி மிரள வைத்தார். இருமுகன் படத்தில் இருவேறு கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுக்கள் பெற்றார்.

சாமி 2 , ஸ்கெட்ச் , கடாரம்கொண்டான் போன்ற படங்களில் முழு பங்களிப்பு நல்கியும் பயனற்று போனது.  ஆனால் இவையாவும் நம் சியானுக்கு தற்காலிகமே. 

நிச்சயம் மீண்டும் அதே மிடுக்குடன் வருவார். நம் அனைவரையும் கவர்வார். 

சா.ரா 

நன்றி : Mr.புயல் இணையம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More