தேவையான பொருட்கள் :
இறால் – அரை கிலோ
பச்சை மிளகாய் – 5
இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன்
வெங்காயம் – 2
[பாட்டி மசாலா] மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
[பாட்டி மசாலா] மிளகுத்தூள் – 1 ஸ்பூன்
[பாட்டி மசாலா] மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
இறாலை நன்றாக கழுவி [பாட்டி மசாலா] மஞ்சள் தூள், [பாட்டி மசாலா] மிளகுத்தூள், [பாட்டி மசாலா] மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
கொத்தமல்லி, பச்சை மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலையை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து பச்சை மணம் மாறும் வரை நன்றாக வதக்கவும்.
அடுத்து அதில் ஊற வைத்த இறால் கலவையை வாணலியில் போட்டு நன்றாக பிரட்டவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக விடவும். இறால் விரைவில் வெந்து விடும்.
இறால் வெந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.
சூப்பரான இறால் மிளகு வறுவல் ரெடி.
நன்றி மாலைமலர்