1
என்னென்ன தேவை?
அரிசி – 1 கப்,
வறுத்து உடைத்த கொள்ளு – 1/2 கப்,
வெல்லத்தூள் – 1½ கப்,
தேங்காய்த்துருவல் – 1½ கப்,
சுக்குத்தூள்,
சோம்பு தூள் – தலா 1/2 டீஸ்பூன்,
உப்பு – ஒரு சிட்டிகை.
எப்படிச் செய்வது?
அரிசியை ஊறவைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து கொள்ளு சேர்த்து வேகவிடவும். பாதி வெந்ததும் அரிசியை சேர்க்கவும். அனைத்தும் வெந்ததும் இறக்கி வெல்லப்பொடி, தேங்காய்த்துருவல், சுக்குத்தூள், சோம்புத்தூள், உப்பு கலந்து சூடாக பரிமாறவும்.
தினகரன்