தேவையானவை
சாமை அரிசி – 2 கப்,
துவரம் பருப்பு – 1/4 கப்,
கத்தரிக்காய் – 1/4 கப்,
முருங்கைக்காய் – 1,
மாங்காய் – 1,
தக்காளி – 2,
சின்ன வெங்காயம் – 6,
பச்சை மிளகாய் – 3,
கறிவேப்பிலை – தேவையானவை,
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்,
புளி – நெல்லிக்காய் அளவு,
நல்லெண்ணெய் – 3 ஸ்பூன்,
பெருங்காயம் – 1 சிட்டிகை,
தேங்காய் – 2 சில்,
சீரகம் – 1 ஸ்பூன்,
பூண்டு – 4 பல்,
கடுகு – சிறிது,
உளுந்து – சிறிது
செய்முறை
சாமை அரிசியை 20 நிமிடம் ஊற வைக்கவும். துவரம் பருப்பை பாதியளவு வேகவைக்கவும். அதில் சாமை அரிசி, காய்கறி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காயம், உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு நன்கு வேகவிடவும். இந்த கலவை முக்கால் பதம் வெந்தவுடன் புளியை கரைத்து விடவும். வொங்காயம் தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தேங்காய், பூண்டு, சீரகம் ஆகியவற்றை அரைத்து சேர்த்து சிறுதீயில் 10 நிமிடம் வேகவிடவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து அதில் கடுகு, கறிவேப்பிலை உளுந்து தாளித்து இதில் சேர்க்கவும். கடைசியில் கொத்தமல்லி தூவி இறக்கவும்.
நன்றி-தினகரன்