தேவையான பொருட்கள்
பாலக்கீரை – 1 கட்டு,
பனீர் – 150 கிராம்,
தக்காளி – 1,
பச்சை மிளகாய் – 2,
வெங்காயம் – 1,
பூண்டு – 10 பல்,
இஞ்சி – 1 இன்ச்,
சீரகம் – 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
நெய் (அ) வெண்ணெய் – 1 டீஸ்பூன்.
செய்முறை
கீரையை கழுவி சுத்தம் செய்துகொள்ளவும். வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் 3 பூண்டு பல், இஞ்சி, பச்சை மிளகாய், கீரை சேர்த்து லேசாக வதக்கி ஆறியதும் மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். தக்காளி, வெங்காயம், மீதமுள்ள பூண்டு முதலியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி, அதில் சீரகம் போட்டு தாளித்து பின் பூண்டு, வெங்காயம், தக்காளி என்று ஒன்றன்பின் ஒன்றாகப் போட்டு வதக்கவும். வதங்கியவுடன் கீரை விழுதை ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும். பனீரை சதுரத்துண்டுகளாக நறுக்கி கொதிக்கும் கீரையில் போட்டு கிளறி விடவும். கடைசியாக நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து இறக்கி சப்பாத்தியுடன் பரிமாறவும்.