என்னென்ன தேவை?
சிக்கன் – 1/2 கிலோ,
சின்ன வெங்காயம் – 200 கிராம்,
காய்ந்தமிளகாய் – 5,
குழம்பு மிளகாய் பொடி – 4 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்,
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்,
உப்பு,
எண்ணெய் – தேவைக்கு,
கடுகு,
கறிவேப்பிலை – சிறிது.
எப்படிச் செய்வது?
சிக்கனை சுத்தம் செய்து கழுவிக் கொள்ளவும். குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு சிக்கனை சேர்த்து தண்ணீர் வற்றும் வரை வதக்கி குழம்பு மிளகாய் பொடி, மஞ்சள் தூள், உப்பு போட்டு நன்றாக பிரட்டி 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி 3 விசில் விட்டு எடுக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயம், காய்ந்தமிளகாய் வதக்கி மிளகுத்தூள், வெந்த சிக்கனை சேர்த்து நன்றாக சுருள வதக்கி இறக்கவும்.
நன்றி -தினகரன்