தேவையான பொருட்கள்:
பாசிப் பருப்பு – 1 கப்
பொடியாக்கப்பட்ட வெல்லம் – 1 கப்
தேங்காய் பால் – 1 கப்
நெய் – 1 தேக்கரண்டி
உப்பு -தேவையான அளவு
ஏலக்காய் – 1 துண்டு
தேங்காய் – 10 slices
நீர் – 4 கப்
பாதாம்
முந்திரி
கிஸ்மிஸ்
செய்முறை:
அடுப்பில் கடாயை வைத்து லேசாக சூடானதும் அதில் பாசி பருப்பை போட்டு 3-4 நிமிடங்கள் வறுத்துக் கொள்ளுங்கள். பொன்னிறமாக வரும் வரை வறுக்கவும். இப்பொழுது அடுப்பை அணைத்து விட்டு அதை ஒரு தட்டில் தட்டிக் கொள்ளுங்கள். அதே கடாயை திரும்பவும் அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி சூடானதும் பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு போட்டு பொன்னிறமாக வறுங்கள். பிறகு உலர்ந்த திராட்சை போட்டு 1 நிமிடங்கள் வரை வறுக்கவும். தேங்காய் துருவல் சேர்த்து 2-3 நிமிடங்கள் வதக்கவும். பிறகு அதில் வறுத்த வைத்த பாசிப்பருப்பை தட்டி அதில் நெய் ஊற்றி நன்றாக கிளறுங்கள். அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
தண்ணீர் கொதித்த பிறகு குக்கரின் மூடியை மூடி விடுங்கள். 2 விசில் அடுக்கும் வரை வைக்கவும். பாசிப்பருப்பு நன்றாக வெந்தவுடன் இறக்கி விடுங்கள். அதில் கொஞ்சம் உப்பு சேர்த்து விட்டு அதனுடன் பொடிக்கப்பட்ட வெல்லத்தை சேருங்கள். 5-6 நிமிடங்கள் வரை சமைக்கவும். பிறகு தேங்காய் பால் சேர்த்து கொள்ளவும். மிதமான தீயில் வைத்து வெல்லம் முழுவதுமாக கரைய வேண்டும். இப்பொழுது அதனுடன் நட்ஸ்களை மேலே தூவி அலங்கரியுங்கள். கடைசியாக வாசனைக்கு ஏலக்காய் தூள் சேருங்கள். மணக்க மணக்க தித்திக்கும் பாயாசம் ரெடி.