தேவையானவை:
300 கிராம் போன்லெஸ் சிக்கன்
3 முட்டை
1 கப் தயிர்
1 கப் மைதா மாவு
1 கப் சோள மாவு
1/2 பெரிய வெங்காயம்
1 துண்டு இஞ்சி
3 பூண்டு பல்
மிளகாய்த்தூள் தேவையான அளவு
மிளகு தூள் தேவையான அளவு
1/2 மேஜைக்கரண்டி மல்லி தூள்
1/2 மேஜைக்கரண்டி சீரக தூள்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு
செய்முறை: பாப்கார்ன் சிக்கன்
முதலில் போன்லெஸ் சிக்கனை எடுத்து நன்கு கழுவி சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு துண்டு இஞ்சி, 3 பல் பூண்டு, மற்றும் அரை பெரிய வெங்காயத்தை போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்து பில்டர் செய்து வைத்து கொள்ளவும். அடுத்து ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் ஒரு கப் தயிரை ஊற்றி அதில் 3 முட்டைகளை உடைத்து ஊற்றி கலக்கிக் கொள்ளவும். பின்பு அதில் அரைத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு கலவையை அதில் ஊற்றி, தேவையான அளவு மிளகாய்த்தூள், மிளகு தூள், மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் இந்த கலவையில் வெட்டி வைத்துள்ள சிக்கன் துண்டுகளை போட்டு சிக்கன் துண்டுகள் மீது இந்த கலவை நன்கு படுமாறு கலக்கி சுமார் 3 மணி நேரம் அளவிற்கு ஊற வைக்கவும். (இதை முதல் நாள் இரவே செய்து ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம்.) சிக்கன் துண்டுகள் ஊறுவதற்குல் ஒரு bowl ல் மைதா மாவு, சோள மாவு, தேவையான அளவு மிளகாய்த்தூள், மல்லி தூள், சீரக தூள்,ஒரு மேஜைக்கரண்டி மிளகு தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
3 மணி நேரத்திற்குப் பிறகு ஊற வைத்திருக்கும் சிக்கனை எடுத்து இந்த மாவு கலவையில் போட்டு பிரட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும். அனைத்து சிக்கன் துண்டுகளையும் இவ்வாறு செய்த பின் மீண்டும் ஒரு முறை இவ்வாறு சிக்கன் துண்டுகளை மாவில் போட்டு பிரட்டி எடுக்கவும். இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சுட்டதும் சிறிது சிறிதாக இந்த சிக்கன் துண்டுகளை எண்ணெயில் போட்டு வறுத்து எடுக்கவும். (சிக்கன் துண்டுகளை மொத்தமாக போடக்கூடாது. பாத்திரத்தின் அளவிற்கேற்ப கம்மியாகவே சிக்கன் துண்டுகளை போட்டு பொரித்து எடுக்கவும். அப்பொழுது தான் சிக்கன் துண்டுகள்நன்றாக பொரிந்து வரும்.) இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான பாப்கார்ன் சிக்கன் தயார் இதை ஒரு தட்டில் வைத்து ketch up ஓடு பரிமாறவும். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.