கிழக்கு இலண்டனில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்த மூன்று குழந்தைகளின் நினைவாக நண்பர்கள், அயலவர்கள் மற்றும் சமூக உறுப்பினர்கள், ஒன்று கூடினர்.
கிழக்கு ஹாம், நேப்பியர் வீதியில் உள்ள மாடி வீட்டில் சனிக்கிழமை காலை தீப்பிடித்ததில் 3 குழந்தைகள் இறந்தனர்.
இந்நிலையில், சுமார் 60 பேர் கலந்துகொண்டு, நேற்று செவ்வாய்கிழமை மாலை உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்காக பிரார்த்தனை செய்தனர்.
இங்குள்ள நிறைய பேருக்கு இது ஒரு சோகமான நாளாக இருந்ததாக நிகழ்வை வழிநடத்த உதவிய உள்ளூர் இமாம் ஷாகிப் ஜுனேஜா கூறினார்.
ஒரு குழந்தை தீயில் கருகி உயிரிழந்த நிலையில், மற்ற இருவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
அத்துடன், அதே குடும்பத்தைச் சேர்ந்த மேலும் இருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், ஆறாவது குடும்ப உறுப்பினர் சிகிச்சை பெற்று வெளியேறி உள்ளார்.
ஆறு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் சுமார் 40 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க வரவழைக்கப்பட்டனர்.
தீ விபத்தில் வீட்டின் தரைத் தளம் மற்றும் முதல் தளத்தின் பாதி பகுதி சேதமடைந்தது.
அதற்கான காரணம் ஆராயப்பட்டு வருகிறது. ஆனால், சந்தேகத்திற்குரிய சூழ்நிலைகள் எதுவும் இல்லை என்று நம்பப்படுகிறது.