லண்டனின் விலை மதிப்புமிக்க ஓவியங்கள் உள்ளிட்ட கலைப்படைப்புக்களை பாதுகாத்து வைத்திருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க Somerset House கலாசார நிலையத்தில் நேற்று (17) விபத்து ஏற்பட்டது.
அதை அணைக்கும் பணியில் சுமார் 25 தீயணைப்பு வாகனங்களும் 125 தீயணைப்பாளர்களும் ஈடுபட்டதாக லண்டன் தீயணைப்புத் துறை X பக்கத்தில் தெரிவித்தது.
கட்டடத்தின் கூரையில் தீ மூண்டதாக லண்டன் தீயணைப்புத் துறை அதில் மேலும் பதிவிட்டிருந்தது. ஊழியர்களும் பொதுமக்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தேம்ஸ் (Thames) நதியோரத்தில் சுமார் 180 மீட்டர் தூரத்துக்குப் புகை சூழ்ந்திருப்பதை இணையத்தில் பதிவேற்றப்பட்ட காணொளிகள் காட்டுகின்றன.
1796ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட Somerset House கலாசார நிலையத்தில் பல விலைமதிப்புள்ள ஓவியங்கள் வைக்கப்பட்டுள்ளன. வின்சென்ட் வான் கோவின் (Vincent Van Gogh) பிரபல “Self-Portrait with Bandaged Ear” அவற்றுள் ஒன்றாகும்.