லண்டன் Greenford பகுதியில் நடேஸ்வராலயா என்னும் நடனப்பள்ளியை ஆரம்பித்துள்ள நடன ஆசிரியை திருமதி கஜப்பிரியா ராஜ்மன் அவர்களை வணக்கம்LONDON மூலமாக அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.
இவர் தனது மழலைக் கல்வியை நடேஸ்வராக் கல்லூரியிலும் இணுவில் மத்திய கல்லூரியிலும் பின் உயர் கல்வியை வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்திலும் கற்று தனது முதுகலைமாணிப் பட்டப்படிப்பை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கற்று பட்டம் பெற்றுள்ளார்.
பரதநாட்டிய கலையை கற்று தேர்ச்சி பெற்று இலங்கையில் வவுனியாவில் நடனவகுப்புக்களை நடாத்தி வந்துள்ளார்.
திருமதி கஜப்பிரியா ராஜ்மன் 2000ம் ஆண்டு வவுனியா திருமறைக்கலாமன்ற குழுவினருடன் இணைந்து சுவிட்சிலாந்தில் நடன நிகழ்ச்சியில் பங்குபற்றியது குறிப்பிடத்தக்கது.
2006ம் ஆண்டு இன்டர்நேஷனல் இன்ஸ்டிடுட் ஒப் மியூசிக், டான்ஸ் அண்ட் ஸ்பீச் என்னும் போட்டியில் குழு மற்றும் தனி நடனத்திற்கான தங்கப்பதக்கம் பெற்றது பாராட்ட வேண்டிய விடயம்.
திருமதி கஜப்பிரியா ராஜ்மனது கலைச்சேவை இங்கிலாந்திலும் தொடர்கிறது. பரதநாட்டியத்தை பயிற்றுவிப்பதுடன் மாணவர்களை போட்டிகளில் பங்குபெறச்செய்து அவர்களை ஊக்குவிப்பதில் தயக்கம் காட்டுவதில்லை.
2011ம் ஆண்டு பிரித்தானியாவில் உள்ள நோர்த்ஹம்ப்டன் வெல்லிங்பரோ இந்து கோமினிட்டி நடாத்திய இந்தியன் ஹவ் எ டலெண்ட்(Indian Have A Talent) போட்டியில் திருமதி கஜப்பிரியா ராஜ்மனது மாணவர்கள் தங்கப்பதக்கம், வெண்கலப்பதக்கம் வென்றது பாராட்ட வேண்டிய ஒன்றாகும்.
இவர் மிருதங்கத்திலும் தேர்ச்சி பெற்றுள்ள ஒரு நடன ஆசிரியை. தற்சமயம் London Greenford இல் நடேஸ்வராலயா என்னும் நடனப்பள்ளியை ஆரம்பித்துள்ளார். உங்கள் பிள்ளைகள் நடனம் கற்க வேண்டுமானால் மின் அஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளுங்கள்
திருமதி கஜப்பிரியா ராஜ்மன் அவர்கள் பப்ரிக் பெயிண்ட் மூலமாக சேலை அலங்கரித்தல் கேக் அலங்கரித்தல் என பல திறமைகளை தன் கைவசம் வைத்துள்ளார்.
இவரது திறமைகள் வானளாவ வளர்ந்து முன்னேற வணக்கம் லண்டன் வாழ்த்துகின்றது.
Email : kgrajhman@gmail.com
தேன்மொழி | வணக்கம்LONDON க்காக